Sunday 28 June 2015

உளுந்து - மருத்துவப் பயன்கள்


நோயின் பாதிப்பு நீங்க:
கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.
இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய:
இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.
உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக:
உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை:
உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.
எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு:
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற:
சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு:
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்:
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

பாகற்காய்

பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது.
அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.பொதுவாக பாகற்காய் உடலுக்குஉஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.
பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம்.

பாகற்காயை விட பாகற்காயி ன் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.

சித்த மருத்துவ வழக்கில் காலங்காலமாக நீரிழிவு நோய்க்கு பாகற்க்காய் பயன்படுத்தி வந்தது அனைவரும் அறிந்த ஒன்ற நீரிழிவு நோயில பாதிக்கபடுகிற glucose பயன்படுத்தல், fuel metabolism இவை முதலியவைகளை தூண்டிவிடுகிறது. மேலும்,இதில் உள்ள lectin , இன்சுலினை போல் செயல்பட்டு,உடல் திசுக்களில் குளுகோஸ்பயன்படுத்துவதை அதிகபடுத்துவத மட்டுமின்றி, மூளையை மட்டுபடுத்தி,பசியை குறைக்கிறது.

Wednesday 24 June 2015

இன்சுலின் சுரக்க வாழைப்பூ

இன்சுலின் சுரக்க வாழைப்பூ:  



வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றை யும் நாம் பயன்படுத்துகிறோம். பெரும்பாலானவற்றில் அதிக சத்து இருக்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி வாழைப்பூ ஆகியவை ரொம்பவும் துவர்க்காது.
அவை அதிக சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். வாழைப்பூவில் இருக்கும் மருந்துவ குணங்கள்:
* வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
* பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.
* உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.
* மூலநோய் கட்டுக்குள் வரும்.
* வாழைப்பூவில் உப்பு போட்டு அவித்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.
* ஆண்களுக்கு தாது விருத்தி அடையும்.

* மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்

Banana Flower For Insulin Secretion

Banana Flower for insulin secretion:

Banana flowers have wonderful medicinal properties.They are high in fiber and  used in cooking because they are ideal for health.

Medicinal qualities:

* Banana flowers secrets insulin necessary for the body to get stronger.  Which will keep the diabetics under control.
* Good for healthy menstruation.
* Reduce body heat.
* Heals Ulcers.
* Hemorrhoids will come down.
* Heals and cleans the stomach ache.
* Cures male Infertility.